youtube celebraties give voice for kaveri issue
தமிழ் வலைதள ஊடகங்களின் பிரபலங்கள், விவசாயிகளில் வாழ்வாதாரதிற்காக ஒன்று கூடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் தங்களுடைய கருத்துக்களை முன் வைத்து இன்று வள்ளுவர் கோட்டம் அருகே காலை 10 மணி முதல் மாலை 1 மணிவரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணத்தால் ஒரு மணி நேரம் மட்டுமே கிடைத்துள்ளதாகவும்... இது தான் தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என கூறியுள்ளார்.
இந்த போராட்டத்தில் இணையதளம் மூலம் தங்களுக்கென தனி ரசிகர் கூடத்தையே வைத்துள்ள 'மெட்ராஸ் சென்ட்ரல்' கோபி, சுதாகர், "பிளேக் ஷீப்" வி.ஜே விக்னேஷ், எரும சாணி விஜய், ப்ளூ சட்டை மாறன், மட்டும் நடிகர் ஆதவன், அருள் தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
