கேரள மாநிலத்தில் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நிவாரண உதவிகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த இயற்கை சீற்றத்தால் 375க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்திருக்கிறது கேரளம். 

மேலும் மிகப்பெரிய அளவிலான பொருள்சேதத்தையும் சந்தித்திருக்கிறது கேரளம்.
 இந்த பேரிடரில் இருந்து கேரளம் மீண்டுவருவதற்கு பொதுமக்களும், தொண்டு நிருவனங்களும், பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். தளபதி விஜய் 70 லட்சம் ரூபாயை நிவாரணத்தொகையாக கொடுத்ததோடு நில்லாமல், பொருளுதவியாக லாரியில் மக்களுக்கு தேவையான பொருள்களை தன் ரசிகர்கள் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார்.

அவர் அனுப்பி வைத்திருக்கும் பொருள்களை பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்திட விஜயின் ரசிகர் பட்டாளம் சேவை புரிந்து வருகின்றத். கேரளாவில் விஜய்க்கு என பெரிய அளவிலான ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த ரசிகர் பட்டாளம் இந்த தொண்டில் அவருடன் கைகோர்த்திருக்கிறது.
 லாரியில் வந்த பொருள்களை மக்களிடம் கொண்டு சேர்த்திட சுறுசுறுப்பாக இயங்கிய விஜய் ரசிகர்களிடையே ஒரு சின்ன பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். 

விஜய் ரசிகையான அவர் தன்னையும் இந்த சேவையில் இணைத்து கொண்டு தொண்டு செய்தது உடன் இருந்த விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. இந்த குட்டி ரசிகையை பாராட்டி விஜய் ரசிகர் ஒருவர் போட்ட ட்வீட் இப்போது இணையத்தில் பிரபலமாகி அனைவர் மத்தியிலும் இந்த குட்டி ரசிகைக்கும் அப்ளாஸ் கிடைக்க வைத்திருக்கிறது.