பிரபல இந்தி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தியன் ஐடியால் சிங்கர், நிகழ்ச்சியில் ராஜஸ்தானில் இருந்து பங்கேற்று மிகவும் பிரபலமானவர், ரேணு நாகர். இவர் சமீப காலமாக ரவி ஷங்கர் என்பவரை காதலித்து வந்த நிலையில், ரவி ஷங்கர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட விஷயத்தை கேட்டு மயங்கி விழுந்த ரேணுவும், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: கர்ப்பமாக இருப்பதாக கூறிய சமந்தா..! எப்போதில் இருந்து தெரியுமா?
 

இளம் பாடகியான ரேணு நாகருக்கு, தபேலா சொல்லி கொடுக்க, அவருடைய வீட்டிற்கு வந்தவர் தான் ரவி ஷங்கர். ஆரம்பத்தில் குரு -சிஷ்யை என்று சென்றுகொண்டிருந்த இவர்களுடைய உறவு நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு கட்டத்தில் காதலாக மாறியுள்ளது.

இவர்களுடைய காதல் விவகாரம் தெரிய வர, ரேணுவின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம், ரவி ஷங்கருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இருப்பினும் ரேணு அவருடன் தான் வாழ வேண்டும் என பிடிவாதமாக இருந்துள்ளார்.

மேலும் செய்திகள்: உடலை விட்டு நழுவும் குட்டை உடையில்... படுக்கையறை போட்டோ ஷூட்..! யாஷிகாவை மிஞ்சிய உச்ச கவர்ச்சியில் சாக்ஷி!
 

இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அதன் படி இருவரும் கடந்த ஜூன் மாதம் தங்களுடைய ஊரை விட்டு வெளியேறி வேறு ஊருக்கு சென்று வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தன்னுடைய மகளை, ஏற்கனவே திருமணம் ஆன ரவி ஷங்கர், காதல் ஆசை காட்டி கடத்தி சென்று விட்டதாக ரேணுவின் பெற்றோர் தரப்பில் இருந்து புகார் கொடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து போலீசார் இவர்களை கண்டு பிடித்து சில தினங்களுக்கு முன், சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு கொண்டுவந்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்திய பின், ரவி ஷங்கர் ஏற்கனவே விவாகரத்து ஆகாதவர் என்பதை இருவரையும் பிரித்து அனுப்பி வைத்துள்ளனர். வீட்டுக்கு சென்ற ரவி ஷங்கர், ரேணுவை பிரிந்த துக்கத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் செய்திகள்: பரவிய வதந்தி... கடைசியில் போனி கபூருக்கு வாக்கு கொடுத்து தேற்றிய அஜித்!
 

இந்த செய்தியை அறிந்த, ரேணு மயங்கி விழுந்து மூச்சு பேச்சு இல்லாத நிலைக்கு சென்றார். பின்னர் இவரை தற்போது மிட்டல் மருத்துமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையிலும், இவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.