நாளுக்கு நாள் சாலை விபத்துகள், அதிகம் நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டுருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், கவனக்குறைவு, குடித்து விட்டு வண்டி ஓட்டுவது, உள்ளிட்ட பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் துளு மொழி படங்களை இயக்கிய 30 வயதே ஆகும் இளம் இயக்குனர் ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஹாரிஸ் ஹூதுவால், என்கிற இளம் இயக்குனர் ஓட்டி வந்த கார் நிலை தடுமாறி, தெற்கு கர்நாடகாவை அடுத்த மூடபிடரி பகுதி சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் இயக்குனர் ஹாரிஸ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். 

விபத்து குறித்து அறிந்ததும் உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் இவர் ஷீரடிக்கு சென்று கொண்டிருந்ததாகவும் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.