கொரோனா வைரஸின் தாக்கமும், அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உலக மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். விரைவாக இந்த வைரஸ் மற்றவர்களை தாக்குவதால், மக்களை பாதுக்காக்கும் முயற்சியில் துரிதமாக செயல்பட்டு வருகிறது மத்திய மற்றும் மாநில அரசு.

கோரோனோ வைரஸில் இருந்து எப்படி தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என பல சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பொது இடங்களில் மக்களுக்கு, மாஸ்க், சானிடைசர் போன்றவையும் பல கட்சிகளின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: பட வாய்ப்பை பிடிக்க படு கவர்ச்சியில் இறங்கிய 'சதா' ! 36 வயதில் குட்டை உடையில் கொடுத்த அதிர்ச்சி போஸ்!
 

பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, முடிந்தவரை மக்கள் அதிகம் வெளியே வர வேண்டாம் என்றும், கூட்டமாக செல்வதை தவிர்ப்பது மட்டும் இன்றி, விசேஷங்களை தள்ளி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா பீதிக்கு நடுவே... கேரளாவில் பிரபல பாடகர் அபிஜித், மற்றும் உறியடி 2 படத்தின் நாயகி  விஸ்மயாஸ்ரீ  திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது.

மேலும் செய்திகள்: மூச்சு முட்ட வைக்கும் முன்னழகு - பின்னழகு! பாடாய் படுத்தும் படுக்கையறை கவர்ச்சி! இளம் நடிகையின் அட்ராசிட்டி!
 

கொல்லம் பகுதியில் நடந்த இவர்களுடைய திருமணத்தில்,  அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.  கொரோனா தாக்கம் சரியான பின்னர், அனைவரையும் அழைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இளம் தம்பதிகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.