young actress rape issue
ஒரு சில திரைப்படங்களில் சிறு வேடங்களிலும், ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தேடி வரும் 23 வயது இளம் நடிகையை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த நடிகை ஒருவருக்கு, குமார் என்கிற நபர் போன் செய்து, தன்னை ஒரு தயாரிப்பாளர் என்றும், தான் தயாரிக்க உள்ள படத்தில் அவரை (நடிகையை) கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி போரூரில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துள்ளார்.
இதனை நம்பி அந்த நடிகையும் குமார் அழைத்த இடத்திற்கு தனியாக சென்றுள்ளார். அங்கு அவரை அடைத்து வைத்து 3 பேர் கத்திமுனையில் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தை அவர்கள் தங்களின் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். போலீசுக்கு போனால் வீடியோவை வெளியிட்டு வீடுவோம் என்றும் நடிகையை மிரட்டியுள்ளனர்.
ஆனால் அந்த நடிகை மிகவும் துணிச்சலாக, காவல் நிலையத்திற்கு சென்று அந்த 3 பேர் மீதும் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த தகவலை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் தேடி வருகிறார்கள். அதே போல் நடிகையின் வேண்டுகோளுக்கு இணங்க போலீசார் அவரின் பெயரை வெளியிடாமல் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. பட வாய்ப்பு தருவதாக கூறி இளம் நடிகையிடம் சில கொடூரர்கள் இப்படி நடந்துக்கொண்டசம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
