தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஜான்சி, தன்னுடைய காதலன் சூர்யா ஏமாற்றியதன் துக்கம் தாங்க முடியாமல், கடந்த வாரம், அவருடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இவரின் இந்த முடிவுக்கு அவருடைய காதலர் சூர்யா தான் காரணம் என ஜான்சியின் பெற்றோர்,  காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

 

இதனால் ஜான்சியின் தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.  விசாரணைக்காக ஜான்சி பயன்படுத்திய ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன் ஆகியவற்றை கைப்பற்றி அதில் ஜான்சி யார்?  யாருக்கு போன் பேசியுள்ளார் என்பது குறித்த அழைப்பை சேகரித்தனர்.  அதில் ஜான்சி அதிகப்படியாக காதலர் சூர்யாவிடம் பேசியதும், அவருக்கு போன் செய்ததும் தெரியவந்தது.

மேலும் போலீசார் ஜான்சியின் காதலர் சூர்யாவிடம் இது குறித்து விசாரணை செய்தனர்.  இந்த சம்பவம் குறித்து சூர்யா கூறுகையில் தனக்கு ஜான்சியை கடந்த 10 மாதங்களாக மட்டுமே தெரியும். இருவரும் மனம் ஒத்துப் போனதால் காதலித்தோம். ஜான்சி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதற்கு,  தன்னுடைய தங்கை திருமணம் முடிந்து காதலைப் பற்றி வீட்டில் சொல்வதாக கூறினேன்.

மேலும் ஏற்கனவே, ஜான்சியை தன்னுடைய தாயாரிடம் தோழி என அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.  மேலும் என் தாயார் எனக்கு பெண் பார்ப்பதாக ஜான்சியிடம் கூறியதால், அவர் அதைப் பற்றியே யோசித்து மனமுடைந்து காணப்பட்டார்.  அவருக்கு நான் ஆறு நாட்களுக்கு முன்பு போன் செய்த போது அவர் என்னுடைய போன் கால்லை எடுக்கவில்லை. 

பின்னர் வேலையில் நான் மும்முரமாக இருந்ததால்,  ஜான்சியின் போனை என்னால் எடுக்க முடியவில்லை. எனக்கு பல முறை முயற்சித்தும் போனை எடுக்காததால்,  அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறியுள்ளார். அதேபோல் நான் ஜான்சியை ஏமாற்றவில்லை என்றும் சூர்யா கூறியுள்ளார்.

சூர்யா இப்படி கூறினாலும்,  ஜான்சியின் பெற்றோர் கூறுகையில் சூர்யா ஜான்சி ஏமாற்றுவது போல் மட்டுமே நடந்துகொண்டதாகவும்,  ஜான்சி சம்பாதித்த பணத்தைக்கொண்டு சூர்யாவிற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் மதிப்பு கொண்ட இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளதாகவும்,  திருமணத்துக்குப்பின் நடிக்க கூடாது என வலியுறுத்தியதால் மனமுடைந்து ஜான்சி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். ஜான்சி இந்த முடிவை நாட முக்கிய காரணம் அவருடைய காதலர் தான் என ஜான்சியின் அம்மா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  தற்போது போலீசார் சூர்யாவை இபிகோ 306 மற்றும் 417 பிரிவின் கீழ் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.