திரையுலகில் போதை பழக்கம் உள்ள நடிகர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் திடீர் என கன்னட திரையுலகை சேர்ந்த பிரபல இளம் நடிகரின் திருமணம் நின்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திரையுலகில் போதை பழக்கம் உள்ள நடிகர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் திடீர் என கன்னட திரையுலகை சேர்ந்த பிரபல இளம் நடிகரின் திருமணம் நின்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சமீபத்தில் திரையுலகை சேர்ந்த பிரபலங்களுக்கு போதை பொருள் விற்பனை செய்ததாக அனிகா என்கிற பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் அனிகா என்கிற பெண் ஒரு சில சீரியல்களில் நடித்து வருவதும், அவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சில போதை மாத்திரைகளை கன்னட திரையுலகை சேர்ந்த பிரபலங்களுக்கு விற்பனை செய்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் போதை தடுப்பு பிரிவு போலீசார், ஒரு சில கன்னட நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களிடம் இது குறித்து விரைவில் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது போதை பொருள் அச்சம் கன்னட திரையுலகினரை சூழ்ந்திருக்கும் நிலையில், கன்னட திரையுலகை சேர்ந்த இளம் நடிகர் ஒருவரின் திருமணம் போதை பொருள் அச்சத்தால் நின்று போய் உள்ளதாக கூறப்படுகிறது. கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் பவன் சவுரியா, இவர் ஹாலி துப்பா, உடும்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், போதை பொருள் அச்சம் காரணமாக இவருடைய திருமணம் நின்று போய் உள்ளது. எனின்று விரைவில் இது குறித்த உண்மையான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.