மூன்று எழுத்து இளம் நடிகர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். சில சமயங்களில் பட விழாக்கள் மற்றும் பட பிடிப்புகளில் கூட போதையில் வருவதை வழக்கமாக வைத்திருந்தாராம்.

இப்போது தான் வளர்ந்து வரும் இவரின் செய்கைகளை பலரும் கண்டித்ததாக தெரிகிறது. ஒரு நிலையில் இது இவருடைய தொழிலையும் பாதித்துள்ளது. மேலும் இவர் மீது அக்கறை கொண்ட சில நண்பர்கள் மற்றும் சக நடிகர்களுக்கு அறிவுரை கூறினார்களாம்.

அதை கேட்டு தற்போது சுதாரித்துக்கொண்ட இளம் நடிகர், இப்போது குடிப்பழக்கத்திற்கு கும்பிடு போட்டு விட்டு, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளாராம். இதனால் இப்போது இவருக்கு சில பட வாய்ப்புகள் கதவை தட்டி வருகிறது.