பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும்... ஒட்டு மொத்த போட்டியாளர்களை வழிநடத்த தலைவர் ஒருவரை தேர்வு செய்வது வழக்கம். இதற்காக பிக்பாஸ் புதிய புதிய டாஸ்க் வைத்தோ அல்லது, ஒரு வாரம் முழுவதும் பிக்பாஸ் டாஸ்குகளில் நன்கு பர்ஃபாம் செய்த ஒருவரையோ தேர்வு செய்து, தலைவருக்கான போட்டி நடத்தி. அதில் வெற்றி பெறுபவர் அந்த வாரத்தின் தலைவராக அறிவிக்கப்படுவார்.

தலைவராக தேர்வு செய்யப்படும் நபரை, மற்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்ய முடியாது என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறை.

இந்நிலையில் நேற்றைய தினம் தலைவருக்கான போட்டி நடந்தது. அதில் தலைவர் போட்டிக்காக, பாலா, நிஷா, மற்றும் சோம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து திடீர் என பிக்பாஸ் குரல், ரம்யா பாண்டியன் "வெற்றியாளர் யார் என வரிசை படுத்துதல் போது, முதல் இடத்தை பிடித்ததால், அவருக்கு பவர் ஒன்றை தான் கொடுப்பதாகவும், தலைவர் போட்டியில் கலந்து கொள்பவர்களில் ஒருவரோ அல்லது இருவரையோ மாற்றலாம் என கூறினார்.

அதன் படி ரம்யா பாண்டியன் நிஷாவுக்கு பதிலாக சம்யுக்தவின் பெயரை கூறினார். பின்னர் இவர்களுக்கு இடையே பந்துகளை பொறுக்கும் போட்டி நடந்தது அதில் அதிக பந்துகளை எடுத்து சம்யுக்தா, தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

கடைசி நேரத்தில், ரம்யா பாண்டியன் செயலால்... அடுத்த வார தலைவராக மாறியுள்ளார் சம்யுக்தா.