சினிமாவில் நடித்தே ஆகா வேண்டும் என்றும் இன்றும் பலர் தங்கள் சொந்த ஊர்ரை விட்டு வெளியேறி சென்னை வருகின்றனர். ஆனால் எப்படி அணுகுவது என்ற குழப்பத்தில் நடுத்தெருவில் நின்றவர்கள் பலர்.

அப்படி சினிமாவில் சாதிக்க துடிக்கும் நடிகர், நடிகை, மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்காக பிரகாஷ் என்பவர் பிங்கர் டிப்ஸ் . காம் (fingertips.com) என்னும் இணையதளத்தை துவங்கியுள்ளார்.

இதன் துவக்க விழா நேற்று சென்னை வடபழனியில் உள்ள ஒரு அரங்கில் நடந்தது, இதில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.வி.சேகர், இயக்குனர்கள் தங்கசாமி, இரத்தின சிவா ARK ராஜராஜன் மற்றும் காளிவெங்கட்,சௌந்தர்ராஜன் மற்றும் இணையதள உரிமையாளர் ரமா சூரியநாராயணன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பங்கேற்று பேசிய எஸ்.வி.சேகர், இந்த இணையதளம் சினிமா வாய்ப்பு தேடும் அனைவருக்கும் ஒரு சிறந்த கருவியாக விளங்கும் இப்படி ஒரு முயற்சியை எடுத்ததற்காக பிரகாஷ்யை பாராட்டுகிறேன் என்று கூறினார்.

மேலும் இதன் உரிமையாளர் பிரகாஷ் சினிமாவில் வாய்ப்பு தேடும் புது முகங்களுக்கு நிச்சயமாக இது உதவியாக இருக்கும் என்றும், இதில் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றிய விவரங்கள் மட்டுமின்றி அவர்களின் வீடியோவும் இணைக்க உள்ளோம், அதனால் அவர்களின் திறமைகளை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அதேபோல் தமிழ் சினிமாவில் தொடர்பு எண்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக அனைவரின் தொடர்புகளும் login செய்த பிறகே அவர் உண்மையான சினிமாக்காரரா என்பதை உறுதி செய்த பிறகு தொடர்பு எண்களை கொடுப்போம் என்றும் .

மேலும் எங்களால் முடிந்த வரை இதில் தவறு நடக்காமல் பார்த்து கொள்வோம். இதில் பல்வேறு தெழில்நுட்ப திறன்கள் எனக்கு தெரிந்ததால் நிச்சயமாக சிறப்பாக கொண்டு செல்வேன் என்றார்.