மண்டேலா திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பொம்மை நாயகி என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்து முடித்துள்ளார் யோகிபாபு.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போது தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருபவர் யோகிபாபு. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்த வடிவேலு மற்றும் சந்தானம் இருவருமே ஹீரோவாக நடிக்கத் துவங்கிய பின்பு, சிறந்த காமெடி நடிகர் என்கிற இடத்தை பிடிக்க பலர் போட்டி போட்ட நிலையில் இந்த இடத்தை நிரம்பியவர் காமெடி நடிகர் யோகி பாபு தான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மேலும் ரஜினி, அஜித், விஜய், என முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதே நேரத்தில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் எந்தவிதமான காமெடி காட்சியாக இருந்தாலும் அதில் இறங்கி நடித்து அசத்துகிறார் யோகி பாபு. 

கடைசியாக இவர் கதையின் நாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது பொம்மை நாயகி என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்து முடித்துள்ளார் யோகிபாபு. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்கி உள்ளார். 

இப்படத்தில் யோகிபாபுவுடன் சுபத்ரா, ஜி,எம்.குமார், ஹரி, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் பா.இரஞ்சித் இப்படத்தை தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனை படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் யோகிபாபு.