தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் யோகி பாபு.  இவர் சினிமாவில் அறிமுகமான காலங்களில்,  சின்ன சின்ன ரோலில் நடித்தாலும், பின் இவரின் வித்தியாசமான காமெடி நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

தற்போது, விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். பல நடிகர்கள் இவரின் பாடி லாங்குவேஜ்ஜாளும் பரட்டை முடிக்கும் ரசிகர்கள் என்றும் கூறலாம்.

இந்நிலையில், இவர் 'வழக்கு எண்', 'ஜன்னல் ஓரம்' , 'குப்பை கதை' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த மனீஷா யாதவும் தாலி கட்டுவது போல் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது குறித்து விசாரித்த போது,  யோகிபாபு அடுத்ததாக நடிக்கும் 'சண்டி முனி' படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், அனால் இந்த படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிக்க வில்லை என்றும், விரைவில் இந்த படம் குறித்து மற்ற தகவல்கள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

இந்த புகைப்படம் இதோ: