பல்வேறு கஷ்டங்களை கடந்து இன்று, தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் என்கிற அடையாளத்தை தமிழ் ரசிகர்கள் மனதில், பதித்துள்ளனர் யோகி பாபு. காமெடி நடிகராக இவரை கமிட் செய்ய பல முன்னணி இயக்குனர்கள் கால் ஷீட்டுக்கு ஒரு பக்கம் காத்திருக்கிறார்கள் என்றால், இவரை கதையின் நாயகனாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர் செம்ம வெயிட்டிங்.

இந்நிலையில் இவருக்கும் மஞ்சு பார்கவி என்கிற பெண்ணுக்கும் கடத்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி, மிகவும் எளிமையான முறையில், யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து, ரசிகர்களிடம் பேசிய யோகி பாபு... சூழ்நிலை காரணமாக திருமணத்திற்கு யாருக்கும் சொல்ல முடிந்து விட்டாலும், வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும் என தெரிவித்திருந்தார்.

அதன் படி தற்போது இவரின் திருமண வரவேற்பு வேலைகள் களைகட்ட துவங்கியுள்ளது. ஏற்கனவே தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை சந்தித்து நேரில் அழைப்பு கொடுத்த யோகிபாபு, தற்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

இது குறைத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.