yogi babu have a foriegn fans and avoid hero chance
தமிழ் சினிமாவில், முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் ஹீரோ வேடம் போட்ட பின்பு, சூரி தான் பல இயக்குனர்களின் சாய்ஸ்சாக இருந்தது.
தற்போது முன்னணி காமெடி நடிகர் என்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளவர் 'யோகி பாபு'. இவருக்காக கதாநாயகன் சப்ஜெட் கதைகளை இயகுனர்கள் கொண்டு வந்தாலும். கோடி பணம் கொட்டி கொடுத்தாலும் கதாநாயகனாக மட்டும் நடிக்க மாட்டேன் என கூறி, உங்கள் படத்தில் காமெடி வேடம் இருந்தா சொல்லுகள் தாராளமாக நடிக்கிறேன் என்று கூலாக கூறுகிறாராம்.
இந்நிலையில் இவர் நடிகை நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவை ஒரு தலையாக காதலிக்கும் வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நயன்தாராவிடம் காதலை சொல்லுவது போல் வெளியான 'கல்யாண வயசு' பாடல் யு டியூப்பில் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.
இதனால் தற்போது உள்நாடு மட்டும்மின்றி வெளிநாடுகளிலும், பிரபலமாகி விட்டார் யோகிபாபு. அந்த வகையில், விஜய் சேதுபதியுடன் அவர் நடித்துள்ள 'ஜூங்கா' படப்பிடிப்பிற்காக இவர் பாரிஸ் சென்ற போது அங்குள்ள தமிழர்கள் இவர் நயன்தாராவுடன் நடித்தவர் என்று அடையாளம் கண்டு இவருடன் நின்று செல்பி எடுதுக்கொண்டார்கலாம் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
