சிறிய காமெடி வேடங்களில் நடித்து, தற்போது முன்னணி காமெடி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர் யோகி பாபு...

இவரின் காமெடிக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, அதனால் 10 க்கும் மேற்பட்ட படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் காமெடியில் கலக்குவதை பார்த்து, ஒரு சில இயக்குனர்கள் இவரை கதாநாயனாக வைத்து படமெடுக்க இவரை அணுகியுள்ளனர். ஆனால் இவரோ தனக்கு ஹீரோவாக நடிப்பதில் உடன்பாடு இல்லை என்று கூறி தேடிவந்த அனைத்து வாய்ப்புகளையும் மறுத்து விட்டாராம்.

இது குறித்து கூறியுள்ள யோகி பாபு, தன்னுடைய முகத்தை எல்லாம் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள், அப்படியே நான் ஹீரோவாக நடித்து அந்த படம் வெற்றி பெற்றாலும் தனக்கு ஹீரோ வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்காது என்பது எனக்கே நன்றாக தெரியும்.

என்னுடைய உயரம் தெரிந்தும், அதை நான் மீறி நடிக்க விரும்பவில்லை ஆகையால் தொடர்ந்து நான் காமெடி நடிகராக நடிப்பதுதான் எனக்கு செட் ஆகும் என கூறியுள்ளார்.