மும்பையில் விழா ஒன்றில் பங்கேற்ற ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, ஆடை அணியாமல் யோகா செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறி அங்கு வந்திருந்தவர்களை  அதிர்ச்சி அடையச் செய்தார்.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி யோகா ஆசிரியராக உள்ளார். அவர் யோகா செய்யும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  லட்சக்கணக்கான சிடிக்கள் விற்பனையாகி ஷில்பா ஷெட்டிக்கு பெயரையும் புகழையும் கொடுத்தது.

இதே போன்று யோகா செய்வது எப்படி? என்பது குறித்து அவர் எழுதிய புத்தகம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்த்தன. இதையடுத்து யோகா தொடர்பாக அவர் எழுதிய 2 ஆவது புத்தகத்தின் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற நடிகை ஷில்பா ஷெட்டி ரசிகர்கள் முன்னிலையில் யோகா செய்து காண்பித்தார். அவர் அணிந்த வந்திருந்த சாதாரண உடையிலேயே அவர் யோகா செய்ததை அனைவரும் விரும்பி ரசித்துப் பார்த்தனர்.

இதைத் தொடர்ந்து பேசிய ஷில்பா ஷெட்டி, விழாவுக்கு நான் அணிந்து வந்துள்ள உடையில் யோகா செய்வது  மிகவும் கடினம் என்றும். இந்த உடை கால் சிலிப் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

ஆனால் ஆடை அணியாமல் யோகா செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் ஷில்பா பேசினார். இந்த பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைவதற்குள், இந்த சாதாரண உடை அணியாமல் என்று திருத்திப் பேசி அவர்களை பெரு மூச்சுவிட வைத்தார்.