பிக் பாஸ் நிகழச்சியின் இரண்டாவது சீசன் சமீப காலமாக தான் சூடு பிடித்திருக்கிறது. யாஷிகா, ஐஸ்வர்யா போன்ற போட்டியாளர்கள் செய்த களேபரத்தால் தான் இந்த அளவிற்கு பிக் பாஸ் சூடுபிடித்திருக்கிறது என்றும் கூட சொல்லலாம்.அதே சமயம் மக்கள் மத்தியில் அவர்கள் மீதான வெறுப்பும் இதனால் அதிக அளவில் பதிவாகி இருக்கிறது.

ஏற்கனவே இவர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட மஹத்தை இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றி இருக்கின்றனர் மக்கள். பிக் பாஸ் மூலம் நல்ல பெயர் சம்பாதித்து சினிமாவில் ஹீரோவாக வலம் வர எண்ணிய மகத் தற்போது கெட்ட பெயரை சம்பாதித்து கொண்டு வெளியேறி இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன்1ல் மக்கள் அதிகம் வெறுத்த நபர்கள் என்று சொல்லும் போது காயத்திரி மற்றும் ஜூலியின் பெயர் அதில் அவசியம் இடம் பெறும். இம்முறை அந்த பட்டியல் பெரிது என்றாலும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் பெயர் அந்த பட்டியலில் இப்போது அதிகம் இடம் பிடித்திருக்கிறது. யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இந்த இருவரும் எப்போது எலிமினேஷனுக்கு வருவார்கள் என பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

அவர்கள் மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தை பார்த்துவிட்டு சமீபத்தில் பிக் பாஸ் காயத்திரி ஒரு ட்விட்டர் ட்வீட்டை வெளியிட்டிருக்கிறார். அந்த ட்வீட்டில் அவர் தெரிவித்திருக்கும் விஷயங்கள் பல யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிற்கு மறைமுகமாக ஆதரவாக இருக்கிறது என்றே கூறலாம்.

நிறைய பேர் பிக் பாஸ் வீட்டில் நடப்பது எல்லாம் பணத்துக்காகவா என கேட்கின்றனர். இது பிக் பாஸ்க்கு எதிரானவர்களின் கேள்வி தான்.பிக் பாஸ் ஒரு சாதாரண நிகழ்ச்சி தான். ஒரு நபரை குறித்து கவனித்து அவர் நல்லவரா? கெட்டவரா? என சொல்வதை விட நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு.இது திட்டமிட்டு நடக்கும் ஒரு நிகழ்ச்சி தான். உங்களுடைய பொழுது போக்குக்காக இங்கு வர எங்களுக்கு பணம் கொடுக்க தான் செய்தார்கள்.

இது மக்கள் பிரபலங்களையும் , பிரபலங்கள் மக்களையும் நெருங்கி பார்க்க புரிந்து கொள்ள வடிவமைக்க பட்ட ஒரு நிகழ்ச்சி தானே தவிர இதுவே எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அல்ல என கூறி இருக்கிறார் காயத்திரி. அவர் திடீர் என இவ்வளவு பெரிய பிரசங்கம் கொடுத்திருப்பது, யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இப்படி எல்லாம் நடந்து கொள்ள பிக் பாஸ் தான் காரணமோ? என மக்களை யோசிக்க வைத்திருக்கிறது. அதைவிட அவர் தன்னை தானே கூட இந்த தருணத்தில் நியாயப்படுத்தி கொள்கிறாரோ என்றும் ஒரு எண்ணம் இதனால் வருகிறது.