இடம்,பொருள், ஏவல் தெரியாமல் விநாயகர் சில முன்பு தொடை தெரிய ஆபாச போஸ் கொடுத்தது மட்டுமின்றி அதை வலைதளங்களில் பரப்பி வரும் பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்துக்கு அர்ச்சனைகள் குவிந்துவருகின்றன.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு ’துருவங்கள் பதினாறு’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இருட்டு அறையில் முரட்டுக் குத்து மற்றும் பிக் பாஸ் மூலம் பெரிய அளவில் அறியப்பட்டார். இளைஞர்களின் கனவு நாயகியாக தற்போது இருந்து வருகிறார். இவரது சமீபத்திய பொழுதுபோக்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் சூடேற்றும் கவர்ச்சிப் படங்களை வெளியிடுவது.

View this post on Instagram

Dinner dinner veggies dinner 🍴#dinnerdate

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on Jun 7, 2019 at 7:34am PDT

 தற்போது பிக் பாஸில் வந்த மஹத்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டீசர் நேற்று (ஜூன் 7) வெளியானது. தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிள்ளையார் சாமி சிலை முன்பு தொடையைக் காட்டி நிற்கிறார். அது கவர்ச்சிப் புகைப்படமாக இருப்பதால், நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர். ’என்னதான் இருந்தாலும் கடவுளை வழிபடுற ஒரு இடத்துல இப்படி அநாகரீகமா போஸ் கொடுக்கலாமா?’ என்று துவங்கி யாஷிகாவின் மானத்தைக்கப்பலேற்றி வருகிறார்கள் வலைதளவாசிகள்.

இது ஒருபுறமிருக்க கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் - 2 நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா கலந்து கொண்டனர். இவர்களது நட்பு தொடங்கி, ஓராண்டு முடிவடைந்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் ஐஸ்வர்யாவுக்கு யாஷிகா கட்டிப்பிடித்து கன்னாபின்னாவென்று  முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அப்படம் குறித்தும் சில கொச்சையான கமெண்டுகள் இடம்பெற்றுள்ளன.