Wishing more power victories to u Nayanthara Keep it going wishes by vignesh sivan

நடிகை நயன்தாரா ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். இந் நிலையில் இந்த ஆண்டு அவர் தனது வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அலங்காரங்களை அதிகம் செய்து, அசத்தியிருந்தாராம். 

நயன்தாராவின் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வதற்காகச் சென்ற அவரது காதலர் விக்னேஷ் சிவன், அவரின் வீட்டில் உள்ள அலங்காரங்களைப் பார்த்து ரொம்பவே அசந்து போனாராம். இன்றைய நாள் போல் நயன்தாரா பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துவதாக, விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் ஒரு பெரிய பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். 

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார்கள். அங்கே எடுத்த போட்டோக்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்கள். அடுத்து வரும் 2018ஆம் ஆண்டுக்குள் விக்னேஷ்-நயன்தாரா திருமணம் நடைபெறும் என்று இவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

Scroll to load tweet…