தமன் இசையில் உருவாகியிருக்கும் கலாவதி என்ற பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் 16 மில்லியன் பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது. இந்த சாதனையை பீஸ்ட் முதல் சிங்கிள் முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட் (Beast). விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ஏற்கனவே நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத் (Anirudh), தற்போது 3-வது முறையாக அவருடன் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளியாகும் படங்களில் சிவகார்த்திகேயனின் பாடல் வரிகள் நிச்சயம் இருக்கும். அந்தவகையில், பீஸ்ட் (Beast) படத்திற்கும் அவர் பாடல் வரிகளை எழுதி உள்ளார். 

அந்த வகையில் அவர் எழுதிய அரபிக் குத்து (Arabic kuthu) என்கிற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் இணைந்து பாடி உள்ளனர். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளியான செல்லம்மா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், அரபிக் குத்து பாடலுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அரபிக் குத்து பாடலின் ரிலீஸ் டைம் அடங்கிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு அரபிக் குத்து வெளியாகியுள்ளது.. துள்ளல் இசையில் வெளியாகியுள்ள இந்த பாடலில் விஜயின் மாஸ் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது..கோல்டன் பேக்ரவுண்டில் தங்க சுரங்கத்தில் மின்னும் தளபதி , பூஜா ஹெக்டேவின் ரொமான்டிக் டான்ஸ்.. வேற லெவல்..விஜயின் பீஸ்ட் முதல் சிங்கிள் ரசிகர்களால் தாறுமாறாக வைரலாக்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில் மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பரசுராம் படத்தை இயக்கியுள்ளார். தமன் இசையில் உருவாகியிருக்கும் கலாவதி என்ற பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் 16 மில்லியன் பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது. அதாவது 1.6 கோடி பேர் இதை பார்த்துள்ளனர். அதேபோல் 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் இப்பாடல் பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமா வரலாற்றில் 24 மணி நேரத்தில் அதிகம் பேர் பார்த்த பாடல் என்ற பெருமை இந்த கலாவதி பாடலுக்கு கிடைத்துள்ளது.

இந்த சாதனையை பீஸ்ட் அரபிக் குத்து முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது..அதோடு வெளியான சில மணிநிறத்தில் விஜயின் முதல் சிங்கிள் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது..

Scroll to load tweet…
Scroll to load tweet…