தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி  மக்களிடையே நல்ல வவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு  நாளும்  சில டார்கெட்  கொடுத்து  நிகழ்ச்சி  கொஞ்சம்  விறுவிறுப்பாக  சென்று கொண்டிருக்கிறது .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளில், தமிழில் தான் பேச வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில்  ஆங்கிலத்தில்  பேசும்  போது கண்டித்து வந்த  பிக்பாஸ், தற்போது  அதை பற்றி  பெரிதும் பேசுவதே இல்லை .

கண்டும் காணாமலும்  இருப்பதால்,  அவரவர்  விருப்பத்திற்கேற்ப மொழிகளில்  பேசுகின்றனர். இதனால்  பிக் பாஸ்  நிகழ்ச்சியின்  விதிமுறைகளில்  மாற்றம்  கொண்டுவரப்பட்டுள்ளதா என்ற  சந்தேகம்  எழுந்துள்ளது