இறுதி கட்டத்தை நோக்கி பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதால், இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்ப்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் கூடிக்கொண்டே போகிறது.

அதே போல் இந்த விளையாட்டின் விதி  படி, கண்டிப்பாக வாரம் ஒரு போட்டியாளர், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிதான் ஆகவேண்டும். ஆனால் இந்த வார நிகழ்ச்சியில் யாராலும் யூகிக்க முடியாத நபர் வெளியேறி ரசிகர்களுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் மும்தாஜ், சென்ராயன், விஜயலட்சுமி, ஜனனி, மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பிக்பாஸ் வீட்டில் பல அராஜகங்களை செய்து ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்த, ஐஸ்வர்யா தான் இந்த வாரம் எலிமினேட் ஆவார் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு காத்திருந்தது பேர் அதிர்ச்சி.

அனைவரும் எதிர்பார்த்தது போல் இந்த வாரம், ஐஸ்வர்யா வெளியேறாமல், ரசிகர்கள் மத்தியில். நல்ல மனிதர், வெகுளித்தனமானவர் என பெயர் எடுத்த சென்ராயன் வெளியேறியுள்ளதாக இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர்.

இதை கேட்ட பலரும் இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள வில்லை என கூறலாம்... மேலும் தற்போது பலரது கேள்வியும், எப்படி ஐஸ்வர்யா தப்பித்தார் என்பதாக மட்டுமே உள்ளது.

இதற்கான காரணங்களாக கூறப்படுபவை...

வாரம் தோறும், ரசிகர்களை கடுப்புபேற்றி வரும் ஐஸ்வர்யாவை இந்த வாரம்... தனக்காக ஐஸ்வர்யா முடி வெட்டி கொண்டதால் சென்ராயன் "கண்ணே மணியே" என கொஞ்சி வந்தார். இதனால் ரசிகர்கள் இவருக்கு வாக்குகள் குறைவாக போட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

அல்லது பிக் பாஸ் இந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேறினால் நிகழ்ச்சியின் மீது உள்ள சுவாரஸ்யம் குறைந்து விடும் என, தன்னுடைய பவரை பயன் படுத்தி காப்பாற்றி இருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும்... இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யா தப்பித்து விட்டது மட்டும் உறுதியாகிவிட்டது.