ரஜினிகாந்த் இன்றைய தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார். அவர் தமிழ்திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவர் குறித்து வந்த கிசுகிசுவில் மிகப்பிரபலமானது தான்” நடிகை லதாவை ரஜினி காதலித்தார் என்பதும், அந்த காதலை அறிந்த எம்.ஜி.ஆர் ரஜினியை ராமாவரம் தோட்டத்தில் வைத்து அடித்தார் என்பதும்”, அந்த காதல் தோல்வி காரண மாக தான் ரஜினி லதா என்னும் பெயருடைய பெண்ணை பின்னர் திருமணம் செய்து கொண்டார் என்றும், அந்த கிசுகிசுவில் கூடுதல் வார்த்தைகள் பின்னர் சேர்த்து கொள்ளப்பட்டது.

இந்த கிசுகிசு கூறித்து இதுநாள் வரை வாய் திறக்காத பழம்பெரும் நடிகை லதா தற்போது ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது இது குறித்து பேசி இருக்கிறார்.
 
அப்போது அவர் எம்.ஜி.ஆர் ஒரு நல்ல நடிகர். அப்போது ரஜினி கமல் என பல நடிகரகள் இருந்தாலும் எல்லாருமே என்னை எம்.ஜி.ஆர் லதா என்று தான் சொல்வார்கள் அது எனக்கு கிடைத்த பெருமை. ரஜினி லதாவை காதலித்தது மற்றும் எம்.ஜி.ஆர் அவரை அடித்தது எல்லாம் உண்மையா? என்ற கேள்விக்கு…. 

பாவம் ரஜினி பற்றி எதுவும் சொல்ல முடியாது என நினைப்பவர்கள் இப்படி எதையாவது சொல்லுகிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. அது பற்றி நான் மேலும் பேச விரும்பவில்லை என தெரிவித்திருக்கிறார். நானும் லதா ரஜினிகாந்தும் நல்ல தோழிகள். எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அவர் வருவார். நானும் அவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வேன். என் மகன் கூட ரஜினி ரசிகன் தான் என்றும் அவர் கூறி இருக்கிறார்.