மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் நேற்று மிக பிரமாண்டமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை, சிவாஜி கணேசனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னையில் அமைந்துள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அமைச்சர்கள், பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டு, சிவாஜியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார், மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அதே போல் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு மற்றும் குடும்பத்தினர் இதில் கலந்து கொண்ட போதிலும், நடிகர் பிரபு கலந்துகொள்ளவில்லை.

இதனால் இவருக்கு கொரோனா என்பது போன்ற வதந்திகள் பரவியது. இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில், நடிகர் பிரபு ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் கொடுத்துள்ளார். " இதில் தன்னுடைய காலில் சிறிய அளவிலான காயம் இருப்பதால் தான் தந்தையின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. மற்றபடி தன்னுடைய உடல் நலத்தில் எந்த பிரச்னையும் இல்லை ஆரோக்கியமாக உள்ளதாக கூறி, கொரோனா வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் பிரபு.