பிரபல ஹீரோக்கள் பலரை ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டுகள் ஆக்கிவரும் கார்த்திக் சுப்பாராஜின் மறுமுயற்சிக்கு ஒரு சரியான மூக்கறுப்புடன் முற்றுப்புள்ளி வைத்தார் ஃபகத் பாசில்.

வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியைத் தொடர்ந்து பல சின்னச்சின்ன கேரக்டர்களுக்கு கூட பல முக்கியமான நடிகர்களைக் கமிட் பண்ணி வருகிறார்.ஏற்கனவே நவாசுதின் சித்திக், இயக்குநர் சசிக்குமார், பாபி சிம்ஹா, ‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் உட்பட்ட இன்னும் பல முன்னணி நடிகர்கள் கமிட் பண்ணப்பட்ட நிலையில் படத்தின் கேரள ரைட்ஸை எகிற வைப்பதற்காக ஒரு குட்டிக் கேரக்டருக்காக ஃபகத் பாசிலை அணுகியிருந்தார் கார்த்திக் சுப்பாராஜ்.

இந்த சும்மா காரணம் சொல்லாமல் மறுத்தால் மீடியாவில் தப்பாக எழுதிவிடுவார்களே என்று நினைத்த ஃபகத் பாசில் தனக்கு ‘வரதன்’ பட ஷூட்டிங் பாக்கியிருப்பதால் நடிக்கமுடியாது என்று தவிர்த்திருந்தார்.

விட்டாரா கார்த்திக் சுப்பாராஜ்? ஃபகத்தின் ‘வரதன்’ ரிலீஸான கடந்த 1ம் தேதி துவங்கிய இரண்டாவது ஷெட்யூலுக்காவது வரமுடியுமா என்று கேட்டுப் பார்க்க ‘விருப்பம் இல்லை’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார் ஃபகத்.

இப்போது ஃபகத் கேரக்டருக்கு வேறோரு ஹீரோவைத் தேடிவருகிறார்கள். ரஜினி படம்னா சின்ன கேரக்டருக்குக் கூட பெரிய ஆர்டிஸ்டேதான் வேணுமா கார்த்திக் சுப்பாராஜ்?