இறைவி, ஆண்டவன் கட்டளை, உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பூஜா தேவாரியா. மேடை நாடக கலைஞரான இவர் பல்வேறு போராட்டங்களுக்கு பின் படங்களில் நடிக்க துவங்கினார்.

தன்னுடைய மனதிற்கு பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் பூஜா, அதிக அளவு மேடை நாடகங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மூன்று சீசனுக்கும் அழைப்பு வந்ததாம், ஆனால் இந்த ஒரே காரணத்திற்காக தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்... "எனக்கு அடுத்தவர் முன்பு, பல் துலக்குவது மற்றும் தூங்குவது பிடிக்காது" இந்த ஒரே காரணத்திற்காக தான், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.