விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் மணிகண்டன் - சோபியா விலகிய நிலையில், தற்போது இதற்கான காரணத்தை மணிகண்டன் கூறியுள்ளார். 

இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சரத் மற்றும் அவரது மனைவி கிருத்திகா, சீரியல் நடிகை தீபா மற்றும் அவரது கணவர் சங்கர் மற்றும் தீபா, மைனா நந்தினி மற்றும் நடிகர் யோகேஷ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும் சீரியல் நடிகருமான மணிகண்டன் மற்றும் அவரது மனைவி சோபியா, உள்ளிட்ட மொத்தம் 12 ஜோடிகள் கலந்து கொண்டனர்.

இவர்களில் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து அஜய் மற்றும் ஆனந்தி, வேல்முருகன் மற்றும் கலா, கோபி மற்றும் ஹரிதா ஆகிய ஜோடிகள் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் திடீரென மணிகண்டன் - சோபியா ஜோடி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கான காரணம் குறித்து தொடர்ந்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தொடர்ந்து மௌனம் காத்து வந்தனர். 

மணிகண்டன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி சில தினங்கள் ஆகியும் நிலையில் தற்போது வெளியேறியதற்கான காரணம் குறித்து முதல் முறையாக கூறியுள்ளார், இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியுள்ளதாவது.... "சற்று தாமதமாக விளக்கம் அளிப்பதற்கு மன்னிக்கவும், என்னை பலர் ஏன் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டீர்கள் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள் அதற்கான காரணத்தை இப்போது கூறுகிறேன். எனக்கு சில உடல்நல பிரச்சனை ஏற்பட்டதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்க கூறியுள்ளார். இதனால் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. கண்டிப்பாக வயல் கார்டு சுற்றில் வருகை தருவேன் என கூறியுள்ளார். 

இதை தொடர்ந்து ரசிகர்கள் சில, இவருக்கு என்ன ஆனது என்றும், விரைவில் இவர் உடல் நலம் பெறவும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.