நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகங்களை கொண்ட டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன், இந்து மதத்தில் இருந்து, முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி வேகமாக பரவிவருகிறது.

இந்நிலையில், குறளரசன் ஏன் மதம் மாறினார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது குறளரசன் பல வருடங்களாகவே முஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். குறளரசன் முஸ்லீம் மதத்திற்கு மாறினால் திருமணம் குறித்து பரிசீலிப்பதாக பெண் வீட்டார் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக குறளரசன் தன்னுடைய பெற்றோரிடம்  கூற, எம்மதமும் சம்மதம் என கூறி வரும் டி.ராஜேந்தர், தன்னுடைய மகன் குறளரசனின் காதலுக்காக அவர் மதம் மாற்றிக்கொள்ள சம்மதம் தெரிவித்தார். ஏற்கனவே டி.ராஜேந்தரின் மனைவி உஷா இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறளரசன் பெற்றோர் முன்னிலையில் இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறினார். இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளவில்லை. சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ளதால் உடல் எடையை குறைக்க லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.