வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வரும் நட்சத்திர தம்பதி ப்ரஜின் மற்றும் சாண்ட்ரா. இந்நிலையில் ப்ரஜின் கடந்த வாரம் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் மனைவி சாண்ட்ரா கர்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த தருணத்திற்காக 10  வருடம் காத்திருந்ததாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பலர் சாண்ட்ரா மற்றும் ப்ரஜின் ஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வந்தனர். சிலர் ஏன், குழந்தை பெற்று கொள்ள பத்து வருடங்கள் ஆகியது என்பது போன்ற சில கேள்விகளையும் முன்வைத்தனர்.

தற்போது சாண்ட்ரா, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்... ஏன் குழந்தை பெற்று கொள்ள பத்து வருடங்கள் ஆனது என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டதால், பண உதவி மற்றும் ஆறுதல் சொல்ல கூட துணைக்கு யாருமே இல்லை. எங்களிடம் இருந்த சில பழைய உடைகளை மட்டுமே கொண்டுவந்து தான் எங்கள் வாழ்க்கையை துவங்கினோம். 

எங்களை காப்பாற்றி கொள்ள இத்தனை வருடங்கள் வேலை,  வேலை என ஓடியதால் குழந்தை பற்றி யோசிக்க முடியவில்லை. ப்ரஜின் வேலை இன்றி சில காலம் இருந்தார். தற்போது சின்னத்தம்பி சீரியல் மூலம் அவருக்கு நல்ல பிரேக் கிடைத்துள்ளதால், நாங்கள் குழந்தை பெற முடிவெடுத்தோம்" என சாண்ட்ரா கூறியுள்ளார். 

 

View this post on Instagram

I was kp n thnkin y ppl r nsgn nd commenting whtr it s our frst child n bth f our profiles, i was so confused y sch a question,thn found al ths n sm youtube channels😂😂😂😂ths r shootin spot pics whn sm ppl cms wt kids nd wants to tk pics wt thm v do, bt nve expect it l go ths mch complications 😂😂😂😂nd one puc f mine s wt @mounaragamsakthi_kritika,antha papavayum enga papa akitanga padupavinga😂😂,fr all who ask sch questions,yes we gonna hv our frst baby ths yr,all ths yrs i was wrkin nd v postponed fr planin kids, cos f our daily bread struggle,since v hd a lov marriage, thr s no one to supoort us Financialy r mentally, v strted our life wt nly sm old dresses v hd, i was kp n wrkin al ths yrs as if u all knw nd prajin tuk a break frm channels nd ws strugglin fr a gud break n cinema,last yr aftr chinnathambi v decided me to tuk a break nd plan fr kid since thngs gt better aftr gud recivn f chinnathambi fr audience nd frm vijaytv, its nthn lke ppl thnk v hv alrdy children,v hv fertility pbms, v r nt married (sm mre thr, lke divoreced, new marriage😈😈😈😂😂😂nthn lke tht, v r married fr 10yrs,v r gona hv our frst baby n sm mnths😇😇😇so pls avoid all ths kind f questions to us. Hope i cleared thngs😂😂😂TO MEDIA A REQUEST(INI ITHA PADIKAMA,PHOTO MATTUM PATHU PUDHU POST POTIDATHGEDA,DELIVERY AACHU NU)😢😢😢😢

A post shared by Sandra Amy prajin😍 (@sandra_amy_prajin) on Feb 16, 2019 at 8:32am PST