ஷூட்டிங்கில் சீன் எடுக்கும் முன்பு கிளாப் போர்டு அடிக்க காரணம் என்ன தெரியுமா?
Clap Board : ஒரு சினிமா ஷூட்டிங்கில் பலதரப்பட்ட கருவிகள் உபயோகிக்கப்பட்டாலும் அதில் ரசிர்கள் பலருக்கும் பரிச்சயமான ஒரு கருவி தான் Clap Board.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பொதுவெளியில் ஒன்றாக கூடி, சந்தோஷமாக தங்களின் பொழுதை கழிக்க உருவாக்கப்பட்டது தான் "தெருக்கூத்துகள்". அதன் பிறகு விடுதலை வேட்கைக்காகவும் அவை பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. அந்த "தெருக்கூத்துகளின்" ஒரு மாபெரும் Upgrade செய்யப்பட்ட வெர்சன் தான் இன்றைய கால சினிமாக்கள்.
சினிமாவை பொறுத்த வரை, அது தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய உச்சங்களை தொடர்ச்சியாக தொட்டு வருகின்றது. அப்படி உச்சம் தொடும் தொழில்நுட்பத்தின் ஆரம்பம் தான் இந்த கிளாப் போர்டுகள். ஒரு திரைப்படத்தின் காட்சியை எடுக்க துவங்குவதற்கு முன், அந்த படத்தின் பெயர், எடுக்கப் போகும் சீனின் நம்பர், மற்றும் இது எத்தனையாவது டேக் என்று அனைத்தையும் கூறிவிட்டு, ஒருவர் கிளாப் போர்டை சத்தமாக அடித்து விட்டு நகர்ந்து செல்வார்.
இதை மட்டும் ஜெயலலிதாவால் கட்டுப்படுத்தவே முடியாதாம்! சந்தோஷமா இருந்தால் என்ன செய்வாங்க தெரியுமா?
அதைத்தொடர்ந்து நடிகர், நடிகைகள் தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்துவார்கள். இதை பல திரைப்படங்களிலேயே நாம் பார்த்திருப்போம். ஆனால் அது ஏன் ஒரு சம்பிரதாயமாக செய்யப்படுகிறது என்பதை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் இந்த கிளாப் போர்டு வெறும் சம்பிரதாயம் மட்டுமின்றி இதில் மிகப்பெரிய விஷயங்கள் அடங்கியுள்ளது.
கிளாப் போர்டில் எழுதப்படும் விஷயங்கள்
கிளாப் போர்டை பொறுத்தவரை அதில் படத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும், அதன் பிறகு அன்று எடுக்கப்படப்போகும் கட்சியின் நம்பர் எழுதப்பட்டிருக்கும். அதுமட்டுமல்ல, அந்த காட்சி எத்தனை முறை ரீடேக் எடுக்கப்பட்டது, அதில் எந்த டேக்கை இயக்குனர் ஓகே சொன்னார் என்பது வரை அதில் குறிப்பிட்டிருக்கும். முன்பு இந்த கிளாப் போர்டு குறிப்புகள் Manualலாக செய்யப்பட்டது, இப்பொது அதில் டிஜிட்டல் முறைகள் வந்துவிட்டது.
படத்தொகுப்பாளருக்கு உதவும் கிளாப் போர்டு
மேலே சொன்ன விஷயங்கள் மட்டுமின்றி, ஒரு கிளாப் போர்டு அடிக்கும்போது அந்த சத்தமும் அருகில் உள்ள ஒலிவாங்கியில் பதிவாகும். இப்பொது அந்த கிளாப் போர்டில் இரு முக்கியமான விஷயங்கள் பதிவிகியிருக்கும். அது தான் ஓகே ஆனா டேக்கின் விவரம் மற்றும் அப்போது பதிவு செய்யப்பட்ட அந்த கிளாப் ஒலி. இவை இரண்டும் படத்தொகுப்பாளர் படத்தை எடிட் செய்யும்போது அவருக்கு உதவும்.
எந்த டேக் ஓகே ஆனது, அதில் எப்போது கிளாப் அடிக்கப்பட்டுள்ளது என்பதை வைத்து அவர் தனது பணியை சுலமாக செய்துவிடுவார். பார்க்க சிறிதாக இருந்தாலும், ஒரு கிளாப் போர்டு தான் படத்தின் ஜீவநாடியாக இயங்கி வருகின்றது.
சியான் விக்ரம் தேசிய விருது வாங்கினாரா? எந்த படத்திற்கு தெரியுமா?