why bindhu is shoking avav gets pain?

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை ஏற்ற போட்டியாளர்களுக்கு மிகவும் கடுமையான டாஸ்குகளை நிகழ்ச்சியாளர்கள் கொடுத்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அந்த வரிசையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிந்துவிற்கு பிக் பாஸிடம் இருந்து சில உணவுப் பொருள்கள் வருகின்றன. கொடுக்கப்பட்ட அனைத்தையும் மீதம் வைக்காமல் பிந்து சாப்பிட வேண்டும் என்று பிக் பாஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பிந்துவிற்கு சாப்பிட கொடுக்கப்பட்ட பொருட்கள், பாகைக்காய், புதினா, எலுமிச்சை பழம், பச்சை மிளகாய். இவைதான். இதனைப் பார்த்து ஒரு நிமிடம் பிந்து அதிர்ச்சியில் உறைந்து போகிறார். 

இதைத் தொரடர்ந்து ஆரவிற்கு கை, கால் மற்றும் முகத்தில் உள்ள அனைத்து முடிகளையும் நீக்க வேண்டும் என பிக் பாஸ் தரப்பிடம் இருந்து கூறப்படுகிறது. ஆரவிற்கு சினேகன் கால் முடிகளை பிய்த்து எடுக்க ஆரவ் வலியில் துடிக்கிறார். வரும் வாரங்களில் இதைவிடப் போட்டிகள் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.