திரையுலகை பற்றி ஏற்கனவே நல்ல அறிந்த குடும்பத்தில் இருந்து வந்த மங்களகரமான பேரை கொண்ட அந்த நடிகை, முதல் படத்தில் சின்ன பாப்பா போல் பள்ளி உடை அணிந்து நடித்த 'சென்னை' என்று தொடங்கும் படமே ஹிட்டாக அமைந்தது.

பின் இவர் நடித்த ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், தொடர்ந்து தமிழில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இந்த நடிகையின் கணவர் இயக்கிய ஒரு படத்தை இவரோ தயாரித்தார். இந்த படம் படுதோல்வி அடைந்தது.

இதைதொர்ந்து மீண்டும் 'சென்னை' என்று தொடங்கும் படத்தின் இரண்டாம் பாகத்தில் தலைக்காட்டிய இந்த நடிகை, வெள்ளி திரையில் இருந்து சின்ன திரைக்கு தாவினார். 

இந்நிலையில் இவர், நடித்த சீரியலில் இருந்து திடீர் என காணாமல் போய் உள்ளார். இதற்கு ஓவர் சீன் போட்டதால் இவர் இதில் இருந்து தூக்கப்பட்டாரா? இல்லை வேறு ஏதாவது காரணமா என்பதை ரகசியமாக வைத்துள்ளனர் படக்குழுவினர்.