Asianet News TamilAsianet News Tamil

விக்ரமாதித்யா யார்? பிரபாஸின் புதிய போஸ்டரோடு வெளியான... 'ராதே ஷியாம்' டீசர் ரிலீஸ் தேதி!

வம்சி, (Vamsi) பிரமோத், (Pramod) தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் (Radha Krishna Kumar)  இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' (Radhe Shyam) படத்தின் டீசர் அக்டோபர் 23 வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

Who is Vikramaditya? Prabhas's new Radhe Shyam poster is out, teaser to come out on his birthday
Author
Chennai, First Published Oct 20, 2021, 11:29 AM IST

வம்சி, பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' படத்தின் டீசர் அக்டோபர் 23 வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும், படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு முழு, பிரபாஸ் நடிப்பில் இந்த படம் முழு காதல் படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் 'ராதே ஷியாம்' படத்தின் சிறப்பு டீசர் அவரது பிறந்த நாளான அக்டோபர் 23 அன்று வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: வாகா எல்லையில் கையில் தேசியக்கொடியோடு தல அஜித்..! வைரலாகும் புகைப்படம்..!

 

Who is Vikramaditya? Prabhas's new Radhe Shyam poster is out, teaser to come out on his birthday

பிரபாசின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த இந்த சிறப்பு டீசர் ஆங்கிலத்தில் வசனங்களை கொண்டிருக்கும். பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்களோடு இது வெளியாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதே ஷியாம், ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: தமிழ்நாட்டின் மியா... படு மோசமான உடையில் ஜூலி நடத்திய போட்டோ ஷூட்... காமெண்ட்ஸில் தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!!

 

Who is Vikramaditya? Prabhas's new Radhe Shyam poster is out, teaser to come out on his birthday

அக்டோபர் 23 அன்று டீசர் வெளியாவதை அறிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ஸ்டைலான போஸில் பிரபாஸ் எதையோ யோசிப்பதை இதில் காணலாம். 'விக்ரமாதித்யா யார்?' என்ற கேள்வியோடு இது வெளியாகியுள்ளது. சமீபத்தில் பூஜா ஹெக்டேவின் சிறப்பு போஸ்டர் அவரது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. இப்போது பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு டீசர் வெளியிடப்பட உள்ளது. இப்படம் பல்வேறு மொழிகளில் ஜனவரி 14, 2022 அன்று வெளியாகவுள்ள உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios