who is the today elimination
வெள்ளித்திரையில் பல்வேறு திறமைகளோடு மின்னிக்கொண்டிருந்த, உலக நாயகன் கமலஹாசனை பல கோடி கொடுத்து சின்னத்திரைக்கு தொகுப்பாளராக மாற்றிய பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிகவும் சுவாரிஸ்யமான நாள் இன்று.
கடந்த வாரம், 15 போட்டியாளர்களில் ஒருவரான ஸ்ரீ உடல் நலம் சரி இல்லாத காரணத்தால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும் கடந்த வாரமே நடிகை அனுயாவும் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் தற்போது 13 போட்டியார்கள் இந்த பிக் பாஸ் களத்தில் நிலைத்துள்ளனர். இன்று அவர்களில் ஒருவர் கண்டிப்பாக எலிமினேட் பண்ண படுவார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.
தற்போது எலிமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் நடிகர் பரணி, கஞ்சா கருப்பு மற்றும் ஓவியா, இவர்களில் இன்று பரணி மற்றும் கஞ்சா கருப்பு ஆகிய இரண்டு பேரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் இன்னும் சில மணி நேரங்கள் பொருத்திருந்து பார்ப்போம்...
