நேற்றைய தினம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக மாறி, போட்டியாளர்களை படாத பாடு படுத்திய பஞ்சாயத்து பற்றி பேசினார் கமல். அதிலும் ஐஸ்வர்யா, நடிகர் சென்றாயனிடம் சண்டை போடும் போது தன்னுடைய கோட்டை கழற்றி கீழே போட்டது ஹை லைட் என்றே கூறலாம்.

மேலும் நேற்று நடிகர் தாடி பாலாஜி நடு இரவில் சாப்பிட்டதை குறும்படம் போட்டு காட்டிய கமல், ஏன் ஐஸ்வர்யா பற்றி ஒரு குறும்படம் கூட போடவில்லை என்பது தான் அனைவருடைய ஆதங்கம். இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் சொல்லி கொடுத்து தான் ஐஸ்வர்யா இப்படியெல்லாம் செய்தாரா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் சிலர் எழுப்பியுள்ளனர்.

மேலும், சிறையில் அடைக்கப்பட்டவர்களை காப்பாற்ற, நடிகர் பொன்னம்பலம் 'ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டதை பெரிய குற்றமாக கமல் கூறினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் பொன்னம்பலம், மும்தாஜ், ஷாரிக், யாஷிகா, ரித்விகா, பாலாஜி ஆகியோர் உள்ளனர். நேற்று இது குறித்து பேசிய கமல்  ரித்விகா காப்பாற்றப்பட்டார் என்று கூறினார். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரோமோ வீடியோவில் கமல் 'புலி வருகிறது, புலி வருகிறது என கூறிய வந்த புலி இங்கே வரப்போகிறது என கூறுகிறார். 

இவர் இதனை கூறியதும், ஜனனி மிகவும் ஷாக் ஆகினார், பின் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தேம்பி தேம்பி அழுகிறார்கள். 

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த சிலர், இந்த வாரம் வெளியேறப்போவது, ஷாரிக் என ட்விட் செய்துள்ளனர். ஷாரிக் வெளியேறியதால் தான் இவர்கள் இருவரும் இப்படி அழுகிறார்கள் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். உண்மையில் என்ன நடக்கும், யார் வெளியேறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.