பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை தாண்டி, பல பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரிடமும் பேசுவதற்கு ஒரு "பிக் பாஸ்" என்கிற தோற்றத்துடன் ஒரு குரல் பேசும். இதுவரை எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்படாத அந்த குரல் யாருடையது என்கிற சந்தேகம் பலருக்கு சந்தேகம் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த குரலுக்கு சொந்தந்தக்காரர் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவர் யார்தெரியுமா..? பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்சியில் அறிமுகமாகி, அம்பு போன்ற பல படங்களில் நடித்த நடிகர் "கோகுலின்" குரல் தானம்.

இவரிடம் இது குறித்து பிரபல தொலைக்காட்சி கேள்வி எழுப்பியபோது நான் அது இல்லை என்று சாதித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் செட்டிற்கு அருகே வந்து போவதால் இவைதான் இந்த குரலுக்கு சொந்தக்காரர் என ஊர்ஜிதமாகியுள்ளது.