பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒருவர் வெளியேற உள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமலஹாசன்,  ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார். இரண்டாவது புரோமோவில் நிஷா காப்பாற்றப்பட்டதையும் கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ, இன்று வெளியேற உள்ள நபர் யார் என்பதை கமல் தெரிவிப்பது போல் வெளியாகியுள்ளது.

நாமினேஷன் லிஸ்டில் உள்ள ஷிவானி, சனம், அனிதா ஆகிய மூவரும் கைகளை உயர்த்தி காட்டுகிறார்கள். பின்னர் பேசும் கமல் வீட்டில் ஒரு எண்ணமும், நாட்டில் ஒரு எண்ணமும் இருக்க கூடும் அல்லவா? மக்க என்ன செய்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம் என்பதை எடுத்து கூறி எவிக்ஷன் கார்டை பிரிக்கிறார்.

அதற்கு முன்பாக சனத்திடம் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்க, இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்... அதற்காக தானே வந்திருக்கிறோம் என கூறுகிறார். இவரை தொடர்ந்து பேசும் அனிதா, சென்றாலும் மனதிருப்தியோடு தான் போவேன், இருந்தாலும் இதற்கு பிறகு நன்றாக விளையாடுவேன் என தெரிவிக்கிறார். ஷிவானி, மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக சிம்பிள் அண்ட் ஸ்வீட்டாக சொல்கிறார்.

பின்னர் கமல் எவிக்ஷன் கார்டை எடுத்து மக்கள் முன் காட்டி விட்டு... உள்ளே காட்ட தயாராகும் போது அணைத்து போட்டியாளர்களும் பரபரப்பில் உச்சத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது.

Scroll to load tweet…