Who is Bigg Boss tittle winner

உலகநாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் இன்னும் 5 பேர் உள்ள நிலையில், இன்று ஒருவரை வெளியேற்றப்படுவார் என்று உலகநாயகன் ஏற்கனவே அறிவித்துள்ளார். மீதமுள்ள நால்வரில் வெற்றியாளர் யார்? என்பதே பிக் பாஸ் ரசிகர்களின் தற்போதைய ஹாட் கேள்வி. இந்நிலையில், பிக் பாஸ் டைடில் வின்னராக சினேகனை அறிவிக்க விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கான காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால், அந்த பணம் முழுவதையும் வைத்து 100 கிராமங்களுக்கும் சேர்த்து ஒரே நூலகத்தை கட்டப்போவதாகவும், அந்த நூலகத்திற்கு "பிக் பாஸ்" நூலகம் என்று பெயர் வைப்பதுடன், அதை பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளரான உலகநாயகனே திறந்து வைப்பார் என, சினேகன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

இப்படி ஒரு வேலை சினேகன் வெற்றி பெற்று நூலகம் கட்டி, அதை கமல் கையால் திறந்து வைத்தால், எதிர்காலத்தில் கமலின் அரசியலில் அது கொஞ்சம் மாஸாக அமைவதுடன், 100 கிராம மக்களை சந்திக்கும் ஒரு வாய்ப்பாகும் என்பதால், பிக் பாஸ் டைட்டில் வின்னர் சினேகனுக்கு கொடுக்க வேண்டும் என்று கமல் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம், கமல் வெற்றியாளர்கள் விஷயத்தில் இதுவரை தலையிடவில்லை என்றால், இதுவரை எந்த சர்ச்சையில் சிக்காமல் மௌனமாகவே இருந்து வந்த கணேஷ் வெங்கட்ராமை வெற்றியாளராக தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது.

இன்னும் 4 நாட்களில் பிக் பாஸ் டைடிலை வெல்லப் போவது யார்? என்பது தெரிந்துவிடும் என்றாலும், எஞ்சியிருக்கும் இந்த 4 போட்டியாளர்களில் கணேஷ் அல்லது சினேகன் இருவரில் ஒருவர் தான் பிக் பாஸ் டைடிலை வெல்வார்கள் என்பது மட்டுமே இப்போதைக்கு எல்லோருக்கும் தெரிந்த உண்மை.