தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு சவாலாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இரண்டாவது சீசனை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சி இந்தியில், 12 வது சீசனை தொட்டுள்ளது.  இதனால் இந்த நிகழ்ச்சியை இதற்கு முன் நடத்தப்பட்ட நிகழ்ச்சியை விட மிகவும் வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் நடத்த திட்டமிட்டுள்ளனர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள்.

இந்நிலையில் ஹிந்தியில் பிக்பாஸ் 12வது சீசன் சென்ற ஞாயிற்றுக்கிழமை தான் துவங்கியுள்ளது. அதில் யார் ஜெயிப்பார்கள் என நடிகை ஹன்சிகா நிகழ்ச்சியில் துவக்கத்திலேயே கணித்து கூறியுள்ளார். 

அதன் படி நடிகை ஹன்சிகா கூறியுள்ளது கிருதி வர்மாவின் பெயர் தான். மேலும் அவர்  இந்த முறை பிக்பாஸ் அதிக சுவாரஸ்யமாக இருக்கும் என நிகழ்ச்சி பற்றிய கருத்தறியும் தெரிவித்துள்ளார் ஹன்சிகா. நிகழ்ச்சி துவங்கிய ஆரம்பத்திலேயே ஹன்சிகா இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.