தான் சினிமாவில் கவர்ச்சியாக நடித்ததால் சில  எதிர்பார்க்காத விளைவுகளை தான் சந்திக்க நேர்ந்ததாக  தெலுங்கு படம் மூலம் பிரபலமான நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும்  தெலுங்கில் சினிமாவில்  நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா.  தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார்.  இன்னும் பல படங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.  

இந்நிலையில் தனது திரை அனுபவம் குறித்து பேசியுள்ளார் ராஷ்மிகா,  சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கு சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாது.  ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நடித்துவிட்டு வீட்டுக்குப் போய்விடலாம் என நினைத்தேன் .  ஆனால் பிறகுதான் தெரிந்தது,  படத்தை பிரமோஷன் செய்வதற்கு சினிமாவில் நடித்ததை விட அதிக மெனக்கெட வேண்டு என்று.  சினிமாவில் எத்தனை உயரத்திற்கு சென்றாலும் பிரமோஷனுக்காக இறங்கிவந்தே ஆகவேண்டும். ஒரு படம் மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்றால் மக்களிடம் நன்கு பழக வேண்டும் என்பதை பிறகுதான் தெரிந்துகொண்டேன்.  சினிமாவில் கவர்ச்சியாக நடித்ததால்  சினிமாவையும் தாண்டி வெளியில் அதிக தர்ம சங்கடங்களை சந்தித்துள்ளேன். 

கவர்ச்சியாக நடித்ததினால் எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.  அது வெறும் நடிப்புதான் என அவர்களுக்கு சொல்லி புரிய வைப்பதற்குள் நான் படாதபாடு பட்டு விட்டேன்.  நான் சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்த உடன்,  எனது நண்பர்கள் உறவினர்கள் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டனர்.  இது  தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது என ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.