தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், எப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், எப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில், ஈசிஆரை தொடர்ந்து சென்னையிலுள்ள கோகுலம் ஸ்டூடியோவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

விரைவில் படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் எப்போது படக்குழு ரஷ்யா புறப்பட்டுச் செல்லும் என்ற தகவல் வெளியாகவில்லை. என்றாலும், தற்போது வரை சென்னையில் பரபரப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது.

சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், 'அண்ணாத்த' தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், பீஸ்ட் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.