*ஏஸியாநெட் இணையதளம்  முதலிலேயே குறிப்பிட்டது போல ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களை ஒப்புக் கொண்டே இருக்கிறார். தர்பார் ஷூட் முடிந்த நிலையில் சிறுத்தை சிவாவிடம் படத்தில் புக் ஆனார், அந்த ஷூட்டிங்கே துவங்காத நிலையில் இப்போது அதற்கும் அடுத்த படத்துக்கு கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் அநேகமாக சர்ப்பரைஸ் ஹிட்டடித்த மிக இளம், புது இயக்குநராக இருக்கவே அதிக வாய்புள்ளதாம். 

*இலங்கை கிரிக்கெட்டர் முத்தையா முரளீதரனின் பயோபிக் படத்தில் நடிக்க விஜய்சேதுபதி கமிட் ஆனார். ஆனால் முத்தையா ஒரு ஈழ தமிழின விரோதி, அவர் படத்தில் மக்கள் செல்வனான விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது! என்று தமிழகம் மட்டுமின்றி, கடல் கடந்தும் தமிழ் அமைப்பினர் குரல் கொடுத்தனர். இதனால் வி.சே. அந்தப் படத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டார் என்றொரு தகவல் கிளம்பியது. ஆனால் அது உண்மையில்லையாம். ஒரு அரை வருடம் கழித்து அந்த ஷுட்டிங்கை துவக்கலாம், பிரச்னை ஓய்ந்துவிடும்! என்று மக்கள் செல்வன் தான் தயாரிப்பாளருக்கு மகத்தான ஐடியா கொடுத்துள்ளாராம். 

*ரஜினிகாந்த், விஜய், அஜித் என மாஸ் ஹீரோக்கள் மூவருமே தங்களின் புதுப்படங்களுக்கு இடையில் நல்ல இடைவெளி விட்டு தான் நடித்து வந்தனர். ஆனால் இப்போதோ, மூவருமே ஒரு படத்தின் ஷூட் முடிவதற்குள்ளேயே அடுத்த படத்தினை ஃபிக்ஸ் செய்துவிடுகின்றனர். இதன் ரகசியம் தெரியாமல் புலம்புகின்றனர் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை ஹீரோக்கள். 

*சைரா நரசிம்ம ரெட்டி ஃபிளாப்பா, ஹிட்டா? என்பது ஒரு புறம் இருக்க, அப்படத்தின் தயாரிப்பாளரான ராம் சரண், தமன்னாவுக்கு ரெண்டு கோடி விலை மதிப்புடைய வைர மோதிரத்தை பரிசாக தந்துள்ளார். காரணம்,  ஷூட்டிங் முடிந்ததும் ‘பை பை’ என்று கை கழுவி விடாமல், ப்ரமோஷனுக்காக பல இடங்களுக்கு வந்து காட்டிய அக்கறைக்காகத்தான். 

*தமிழ் சினிமாவில் ஃப்ரெஷ் ஹீரோயின் பஞ்சம் தலைவிரித்து டான்ஸ் ஆடுகிறது. விளைவு, ஹீரோக்களே ஆங்காங்கே இருந்து புது ஹீரோயின்களை ரெக்கமெண்ட் செய்கின்றனர். அந்த வகையில் விக்ரம் தனது புதிய படத்துக்கு கே.ஜி.எஃப். ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டியை ரெக்கமெண்ட் செய்துள்ளார். 
-