watch sunny leon on tv everyday

பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிப்பைத் தொடர்ந்து டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக களமிறங்குகிறார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்ததோடு விளம்பரங்களில் நடித்து வந்தார்.

சினிமா நிகழ்ச்சிகளில் வலம் வரும் இவர் தற்போது ஆங்கிலப் புத்தாண்டு அன்று பெங்களூரில் மான்யதா பார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருக்கிறார்.

ஆனால், சன்னி லியோனின் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பிடனர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக பெங்களூரில் சன்னி லியோன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியான மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு சன்னி லியோனுக்கு கிடைத்துள்ளது.

விரைவில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி பற்றி சன்னி லியோன் கூறியது, "டிஸ்கவரி ஜீத் சேனலில் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கயிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இது என்னை மிகவும் பிரபலப்படுத்திக் கொள்ளும் விதமாக இருக்கும். இதுவரை டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் என்னை பார்த்திராத ரசிகர்களிடம் பிரபலப்படுத்திக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக உள்ளது.

மேலும், நான் தொகுத்து வழங்குவதன் மூலம் பலரை இந்த நிகழ்ச்சியை பார்க்க வைக்க முடியும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.