Asianet News TamilAsianet News Tamil

’தளபதி 64’படத்தில் இணைந்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி...

விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் தொகுப்பளினியாக அறிமுகமான ரம்யா சுப்ரமணியன், தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திரைப்பட ஆடியோ லான்ச், விருது விழா என பல மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்பதைத் தாண்டி தற்போது படங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ரம்யா. 

vj ramya joins hands with  thalapathi 64 team
Author
Chennai, First Published Nov 9, 2019, 1:17 PM IST

ஏற்கனவே பெரும் நட்சத்திரப்பட்டாளங்கள் குவிந்துள்ள ‘தளபதி 64’படத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜே ரம்யாவும் இணைந்துள்ளார். இத்தகவலை ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.vj ramya joins hands with  thalapathi 64 team

தளபதி 64 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு இசை - அனிருத். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. விஜய்யின் 64-வது படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையுமான விஜே ரம்யா நடிக்கிறார். இத்தகவலை ரம்யாவும் உறுதி செய்துள்ளார். தில்லியில் கடந்த 20 நாள்களாக நடந்த படப்பிடிப்பில் ரம்யா கலந்துகொண்டுள்ளார். தில்லியில் படப்பிடிப்பு முடிந்த பிறகு அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது. vj ramya joins hands with  thalapathi 64 team

விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் தொகுப்பளினியாக அறிமுகமான ரம்யா சுப்ரமணியன், தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திரைப்பட ஆடியோ லான்ச், விருது விழா என பல மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்பதைத் தாண்டி தற்போது படங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ரம்யா. 'ஓ காதல் கண்மணி' படத்தில் தொடங்கி தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அஜித்தின் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.vj ramya joins hands with  thalapathi 64 team

சமீபத்தில் வெளியாகி பலரது கவனம் ஈர்த்த 'ஆடை' படத்தில் அமலாபாலுடன், அவரது தோழியாக முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 64' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரம்யா “இது தான் எனது வாழ்க்கையின் மிக சிறந்த உண்மையான தருணம், இப்படி ஒன்று நடப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும், தளபதி விஜயிக்கும் மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios