விஜய் டிவி தொலைக்காட்சியில்... ஆங்கிலம் - தமிழ் என இரு மொழியிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கலக்கி வருபவர் வி.ஜே.ரம்யா. மற்ற தொகுப்பாளர்களை விட... இவருக்கு ஆங்கில புலமை சற்று அதிகம் என்றே கூறலாம். 

அடிக்கடி, விதவிதமான ஆடையில் போட்டோ ஷூட் செய்து அதன் புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, தன்னுடைய அழகையும் திறமையையும் மெருகேற்றி கொண்டே போகும் இவர், தற்போது பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தேவதை போல ஜொலிக்கிறார்.

பக்காவாக டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த உடை....   ரவி வர்மாவின் ஓவியத்திற்கு போஸ் கொடுப்பதற்காக, உருவாக்கப்பட்டுள்ளது. பச்சை நிற பஃப் கை வைத்த ஜாக்கெட், அதே பச்சை நிறத்தில்... சிறு சிறு ஜிமிக்கி பூக்கள் தைக்கப்பட்ட பாடவை. அதில் தங்க நிறத்தில் பெரிய அளவிலான பார்டர் என அசத்தலாக உள்ளது.

மேலும், சிவப்பு நிற தாவணி அணிந்துள்ளார் ரம்யா. நெற்றியில் சிறிய அளவிலான நெற்றி சூட்டி, பொட்டு, காதில் ஜிமிக்கி கம்மல், கழுத்தில் சிறிய செயின் மற்றும் கைகளில் கண்ணாடி வளையல், மூக்கில் பொல்லாங்கு அணிந்து மிதமான மேக் அப்பில் அழகு தேவதை போல் இறுக்கிறார் ரம்யா.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் விதத்தில் உள்ளது என பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.