விஜய் டிவியில் தொகுப்பாளராகவும், தற்போது பல படங்களில் நடிகையாகவும் நடித்து வருபவர் வி.ஜே.ரம்யா. நுனி நாக்கு ஆங்கிலத்தில் செம்ம ஸ்டைலிஷாகவும், அதே சமயத்தில்... நல்ல தமிழில் பிழை இன்றி உச்சரிப்பதும் தான் ரம்யாவின் ஸ்பெஷல். 

நடிப்பு:

ஒரு பக்கம் தொகுப்பாளராக இவர், ஜொலித்து கொண்டே இருந்தாலும், மற்றொரு புறம்... திரைப்படங்களில் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில், இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான மொழி படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதை தொடந்து, 'மங்காத்தா' படத்தில் ரிப்போர்ட்டர் ரோலில் நடித்தார்.

திருமணம்:

இந்நிலையில் இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு, ரம்யாவின் பெற்றோர் இவரை அப்ரஜித் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

விவாகரத்து:

திருமணம் ஆன ஒரே மாதத்தில் இவர் விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த பரபரப்புக்கு மத்தியில்... இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ரம்யா. இதனால் மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததால் தான் ரம்யாவின் வாழ்க்கை விவாகரத்து வரை சென்றதாக நெட்டிசன்கள் பலர் விமர்சித்து வந்தனர்.

பதில் கூறிய ரம்யா:

இந்நிலையில், ரம்யா... இப்படி எழுந்த விமர்சனங்களுக்கு முதல் முறையாக பதிலளித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர். நான் திருமணம் ஆன 10 நாட்களிலேயே.. எனக்கும் கணவருக்கும் ஒத்து வராது என்பது தெரிந்து விவாகரத்து பெற முடிவு செய்து, இருவரும் பரஸ்பரமாக பிரிந்தோம். 10 நாட்களுக்கு பின் நான் என்னுடைய அம்மா வீட்டிற்கே சென்று விட்டேன். இப்படி இருக்கையில் என்றுடைய விவாகரத்துக்கு எப்படி மணிரத்னம் எனக்கு வாய்ப்பு கொடுத்தது தான் காரணம் என சொல்ல முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னேறும் ரம்யா:

விவாகரத்து பின், முழுமையாக தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வரும் ரம்யா, குணச்சித்திர வேடத்தில் நடித்தாலும் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஆடை, படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். 

ரம்யாவின் விவாகரத்துக்கு காரணம்... மணிரத்னம் கொடுத்த வாய்ப்பு தான் கிட்ட தட்ட 5 வருடங்களாக கூறி வந்த சிலருக்கு ரம்யா கொடுத்த பதிலடியால்...  முற்றி புள்ளி வைத்த போதிலும்... 10 நாளில் விவாகரத்து முடிவை அவர் எடுத்த உண்மையும் தெரியவந்துள்ளது.