விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா... அடிக்கடி மொக்கை வாங்கி மற்றவர்களை மகிழ்விப்பதுதான் இவருடைய ஸ்பெஷல் என்று கூறலாம். டிடிக்கு அடுத்து நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்லும் தொகுப்பாளர் இவர். 

சிறந்த தொகுப்பாளராக மாற வேண்டும் என பல்வேறு கஷ்டங்களை கடந்து தொகுப்பாளராக உயர்ந்தவர் பிரியங்கா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் தொலைகாட்சியில் தொழிநுட்ப கலைஞராக பணியாற்றிய ஒருவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 

விலகும் பிரியங்கா:

திருமணத்திற்கு பிறங்கும் தொடர்ந்து தன்னுடைய தொகுப்பாளர் பணியை மிகவும் சிறப்பாக செய்து வந்த இவர் தற்போது சில காலம் ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. 

இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், தற்போது பிரியங்கா கர்பமாக உள்ளதாகவும்... இதன் காரணமாக இவரால் மும்பு போல் நிகழ்சிகளை தொடர்ந்து நின்றுக்கொண்டு அங்கரிங் செய்யமுடியாததால் சில நாட்கள் ஓய்வில் இருக்க முடிவு செய்துள்ளாராம். 

பிரியங்கா திடீர் என இந்த நிகழ்ச்சியில் இருந்து ஓய்வு பெற போவதாக வெளியாகியுள்ள தகவலால் ரசிகர்கள் சற்று கவலை கொண்டாலும், பலர் இவருக்கு கர்ப காலத்தல் எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை கூறி வருகின்றனராம்.