vj manimegalai support suriya
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் ரசிகர்கள்
மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைத்து திரையரங்கங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அமிதப்பச்சனுடன் இணைத்து சூர்யா நடிப்பதை கிண்டல் செய்யும் விதத்தில் பிரபல தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளிகள் இரண்டு பேர் அமிதாப் உயரத்தையும் சூரியாவின் உயரத்தையும் ஒப்பிட்டு, 'அமிதாப்புடன் சூர்யா நடிக்கும் போது ஸ்டூல் மீது ஏறி நின்று தான் நடிக்க வேண்டும் என்று கலாய்த்தனர்.
இவர்களின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிதத்தோடு, பிரபலங்கள் கருணாகரன், விஷால், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.

மேலும் இதே தொலைகாட்சியில் பணிபுரிந்து வரும் விஜே மணிமேகலை, தன்னுடன் பணிபுரியும் சக விஜேக்களை கண்டிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் 'எவ்வளவு உயரம் என்பது முக்கியமில்லை' எவ்வளவு உயரனும் என்பது தான் முக்கியம் என்கிற 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வசனத்தையும் குறிப்பிட்டு சூர்யாவிற்காக வரிந்து கட்டியுள்ளார்.
