Vivek requested to set up film publishing houses

பட வெளியீட்டை திரைத்துறை அமைப்புகள் முறைப்படுத்த வேண்டும் என்று திரைத்துறை அமைப்புகளுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கலாபிரபு இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘இந்திரஜித்’.

கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், சோனாரிகா மற்றும் அஷ்ரிதா ஷெட்டி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.

இந்தத் திரைப்படம், குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தகமாக வெளியிடப்பட்டது.சென்னையில் நேற்று நடந்த இந்த புத்தக விழாவில், நடிகர் விவேக் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியது: “பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும்போது சிறிய பட்ஜெட் படங்களும் ரிலீஸாகி தோல்வி அடைவதைத் தடுக்க வேண்டும்.

சிறிய பட்ஜெட் படங்கள் குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடும் அளவிற்கு திரைத்துறை அமைப்புகள் இணைந்து பட வெளியீட்டை முறைப்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.